ஆரோவில் அருகே இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


ஆரோவில் அருகே இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 May 2022 10:44 PM IST (Updated: 11 May 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் அருகே இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சுதேவசியா (வயது 26). இவர் கட்டிடக்கலை சம்பந்தமாக பணிபுரிகிறார். இவர் கடந்த 3-ந் தேதியன்று வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பணி செய்வதற்காக தேடியபோது ஒரு இணையதள லிங்க் வந்துள்ளது.


உடனே அவர், அந்த லிங்கிற்குள் சென்று தன்னுடைய விவரங்களை பதிவு செய்தார். அப்போது ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஒருவர், வாட்ஸ்-அப் மூலம் அஞ்சுதேவசியாவை தொடர்பு கொண்டுள்ளார். 

அதில், அவர்கள் கூறியதன் படி, வேலைக்கு சேருவதற்காக2 லட்சத்து 415- ரூபாயைவயநாடு மனதவாடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மேலும் ஒருவரின், வங்கி கணக்கிற்கும் டெபாசிட் செய்துள்ளார்.

பின்னர் அந்த டாஸ்க்குகளை அஞ்சுதேவசியா முடித்ததும், அவருக்கு சேர வேண்டிய பணத்தை மர்ம நபர் தராமல் ஏமாற்றி மோசடி செய்ததோடு மேலும் பணம் கட்டச்சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அஞ்சுதேவசியா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story