இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 May 2022 5:17 PM GMT (Updated: 2022-05-11T22:47:17+05:30)

பழனி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பழனி : 

பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருசமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் தலைமையில் ஒரு சமூகத்தினர் நெய்க்காரப்பட்டி அருகே உடுமலை சாலையில் வண்டிவாய்க்கால் என்னுமிடத்தில்  மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் இருசமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், இருசமூகத்தினரும் சுமுகமாக செல்ல வேண்டும் என்றும், வருகிற 18-ந்தேதி மறு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Next Story