1 மணி நேரம் கொள்ளிடத்தில் நின்ற ரெயில்
பாலப்பணியால் கொள்ளிடம் ரெயில் நிலையத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் நின்றது.
கொள்ளிடம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை மாலை 6.40 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும்.
வழக்கம்போல இந்த ரயில் நேற்றுமுன்தினம் மாலை புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. எதிரே சிதம்பரம் செல்லும் வழியில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் ரயில் பாதையில் தற்போது பணிகள் நடந்து வருவதால், அந்த பணிக்கு பயன்படுத்தப்படும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணிகள் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தாமதம்
இதனால் வழக்கம்போல் கொள்ளிடத்திலிருந்து மாலை 6.40 மணி அளவில் புறப்பட வேண்டிய ரயில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு சென்றது. ரெயில் தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story