மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை கேரளாவுக்கு விரைவு


மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை கேரளாவுக்கு விரைவு
x
தினத்தந்தி 11 May 2022 5:24 PM GMT (Updated: 2022-05-11T22:54:35+05:30)

மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று உள்ளனர்.

குழித்துறை:
மார்த்தாண்டத்தில் தனியார் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று உள்ளனர். 
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தனியார் கல்லூரியில் கொள்ளை
மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞானதீபம் என்ற பெயரில் சமுதாய கல்லூரி உள்ளது. இதை மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்த தோமஸ்ராஜ் நடத்தி வருகிறார். 
சம்பவத்தன்று மாலையில் வழக்கம் போல் கல்லூரியை பூட்டி விட்டு சென்றனர். இரவு நேரத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் கல்லூரியின் முதல் மாடியில் உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தனிப்படை கேரளா சென்றது
இந்த கொள்ளை பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, அதில் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை நடத்திய போது, கொள்ளையன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து மர்ம ஆசாமிகளை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று உள்ளனர்.

Next Story