விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்


விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 May 2022 5:44 PM GMT (Updated: 2022-05-11T23:14:15+05:30)

விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

ராமநாதபுரம், 
திருப்புல்லாணி வட்டாரத்தில் களிமண்குண்டு, ரெகுநாத புரம், வண்ணாங்குண்டு, காஞ்சிரங்குடி மற்றும் தில்லை யேந்தல் ஊராட்சிகளில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  முகாமில் விவசாயிகளிடம் இருந்து மண் மாதிரிகள் பெறப்பட்டன. வங்கிகளில் கிசான் கடன் அட்டை வழங்கப்படுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. மண் மாதிரி ஆய்வு அறிக்கை அட்டை வழங்கப்பட்டது. நீர் நிலைகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Next Story