நகையை திருடிவிட்டு மஞ்சள் கயிறை மாட்டிவிட்டு சென்ற பெண்


நகையை திருடிவிட்டு மஞ்சள் கயிறை மாட்டிவிட்டு சென்ற பெண்
x
தினத்தந்தி 11 May 2022 5:49 PM GMT (Updated: 2022-05-11T23:19:28+05:30)

கருப்பட்டி வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு தூக்க மாத்திரை கொடுத்து நகைைய திருடிவிட்டு மஞ்சள் கயிறை மாட்டிவிட்டு சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

கீழக்கரை, 
கருப்பட்டி வியாபாரம் செய்யும் பெண்ணுக்கு தூக்க மாத்திரை கொடுத்து நகைைய திருடிவிட்டு மஞ்சள் கயிறை மாட்டிவிட்டு சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.
வியாபாரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தினைக்குளம் நாடார் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தா (வயது60). இவர் பல ஆண்டுகளாக கருப்பட்டி வியாபாரத் திற்காக கீழக்கரைக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2 நாட்களாக இவர் வந்து செல்லும் பஸ்சில் தொடர்ச்சியாக ஒரு பெண் துணி வியாபாரம் செய்வதாக கூறி கீழக்கரையில் எனக்கு வழிகாட்டுங்கள் என்று பின்தொடர்ந்து சென்று உள்ளார். 
அதனை நம்பி அவருடன் இந்த மூதாட்டியும் சென்றுள்ளார். பிறகு வியாபாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் சமயத்தில் கீழக்கரை பழைய மீன் கடை அருகில் மூதாட்டிக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்துள்ளார். குடித்த உடனே மூதாட்டி தலைசுற்றுவதுபோல் இருப்பதாக கூறியுள்ளார்.  இதையடுத்து தூக்க மாத்திரையும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டவுடன் மூதாட்டி அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். 
விசாரணை
அந்த சமயத்தில் மூதாட்டியை அருகில் படுக்கவைத்து விட்டுஅவர் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது மூதாட்டியை அப்படியே விட்டுச்செல்ல மனமில்லாமல் மூதாட்டியின் கழுத்தில் மஞ்சள் கயிறை மாட்டிவிட்டு மர்மப் பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். 
பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மூதாட்டி நகை,பணம் காணாமல் போனதை  கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறி புலம்பினார். பின்னர் இதுகுறித்து மூதாட்டி கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம பெண்ணை தேடிவருகின்றனர்.

Next Story