வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு
வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருட்டு போனது.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே மங்காளப்பட்டியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 42). நேற்று சுமதி தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு வீட்டின் சாவியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இலுப்பூர் போலீசாருக்கு சுமதி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் சுமதியின் வீடு அருகே உள்ள பாலத்தின் கீழ் நகைகள் வைத்திருந்த டப்பா மற்றும் கவரிங் நகைகள் கிடந்தது. மர்ம நபர்கள் நகைகளை எடுத்து கொண்டு மற்ற பொருட்களை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story