அறந்தாங்கியில்பிரியாணி சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட 27 குடும்பங்களுக்கு நிவாரணம் + "||" + Relief for 27 families who suffered from vomiting and fainting after eating biryani
அறந்தாங்கியில்பிரியாணி சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட 27 குடும்பங்களுக்கு நிவாரணம்
பிரியாணி சாப்பிட்டு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட 27 குடும்பங்களுக்கு நிவாரணமடைந்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் கடந்த 4-ந் தேதி கட்டிட தொழிலாளர்கள் சாப்பிட்ட பிரியாணியால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பிரியாணி சாப்பிட்ட 46 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 27 குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் 22 பொருட்கள் அடங்கிய ரூ.1,400 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கோட்டாட்சியர் சொர்ணராஜ் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர், உரிய காலத்தில் மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.