அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 11:46 PM IST (Updated: 11 May 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் அழகுராஜா, கண்ணையன், லட்சுமிநாராயணன், பரமசிவம், கிருஷ்ணவேணி, ஜெயசுதா, செந்தாமரை, சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்னக்கிளி மற்றும் நிர்வாகிகள் ரவி, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story