19 இருளர் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெற டெபாசிட் தொகைவழங்கப்பட்டது


19 இருளர் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெற டெபாசிட் தொகைவழங்கப்பட்டது
x
தினத்தந்தி 11 May 2022 6:17 PM GMT (Updated: 2022-05-11T23:47:26+05:30)

19 இருளர் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெற கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து டெபாசிட் தொகை வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

கலவை தாலுகா அத்தியானம் இருளர் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் மின்சாரம் வசதி இல்லாமல் வாழ்ந்து வந்தனர். மின்சார வசதி கேட்டு இருளர் காலனி மக்கள் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

ேகாரிக்கையை பரிசீலனை செய்த கலெக்டர், அத்தியானம் கிராம இருளர் காலனி மக்களை சேர்ந்த 19 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு டெபாசிட் தொகையை மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.57 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். 

அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஷமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story