மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
காரைக்குடி,
மருத்துவமனையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.
மாற்றம்
காரைக்குடி- திருச்சி நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. காரைக்குடி ரெயில்வே சாலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய அரசு மருத்துவமனையும் மாவட்ட தலைமை மருத்துவமனை தகுதியோடு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் ரெயில்வே சாலையில் உள்ள அரசு பழைய மருத்துவமனையில் உள்ள அனைத்து உபகரணங்களையும் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தபகுதி மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் ெரயில்வே சாலையில் உள்ள மருத்துவமனையை தொடர்ந்து செயல்படும் என உறுதி அளித்தனர்.ஆனாலும் பழைய மருத்துவமனையில் இருந்த மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட் களையும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழைய அரசு மருத்துவ மனை மாவட்ட தலைமை மருத்துவமனை தகுதியோடு அங்கேயே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க., பாரதீய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மக்கள் மன்றம் ஆகியவற்றின் சார்பில் பழைய அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் உள்ளாட்சி மேம் பாட்டுப் பிரிவின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான சோழன் சித. பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் நாகராஜன்,அ.தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் மெய்யப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் தேவன், கவுன்சிலர் பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஏ.ஐ. டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், நகர் செயலாளர் சீனிவாசன், மக்கள் மன்றத்தின் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அதனைத் தொடர்ந்து காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி நல்ல தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story