20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 11:52 PM IST (Updated: 11 May 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

உளுந்தூர்பேட்டை, 
உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் சிறப்பு தாசில்தார் காதர்அலி தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் வெளியூருக்கு கடத்தி செல்வதற்காக 20 டன் ரேஷன் அரிசி லாரியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Next Story