வேளாண்மை துறை சிறப்பு முகாம்


வேளாண்மை துறை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 11 May 2022 6:28 PM GMT (Updated: 2022-05-11T23:58:24+05:30)

வளையாத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து வேளாண்மை துறை சிறப்பு முகாம் நடந்தது.

கலவை

கலவையை அடுத்த வளையாத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து வேளாண்மைத்துறை சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு விஸ்வநாதன் தலைமை தாங்கி விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை, நேரடி கொள்முதல் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சரஸ்வதி, வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து ேபசினார். 

வணிகத்துறை சார்பாக அர்ச்சனா, பட்டா மாறுதல் குறித்து கிராம அதிகாரி சோபன் ராஜா, கால்நடைத்துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், கால்நடைகளை தாக்கும் நோய்கள் பற்றி டாக்டர் சதீஷ் விளக்கமாக பேசினார். 

மேலும் ஏரி மண் வளம், விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெறுதல், பட்டா மாறுதல், வேளாண் கருவிகள் வாங்குதல் போன்றவை குறித்து முகாமில் பொதுமக்கள் பலர் மனு கொடுத்தனர். 

முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story