மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருக்கோவிலூர் அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் பார்த்திபன் என்கிற கோகுல் (வயது 19). இவர் தனது நண்பரான வேங்கூர் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் மகன் மகாபிரபு (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூருக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். செட்டிதாங்கலில் உள்ள திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற மினிலாரி ஒன்று திடீரென நின்றது. இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அந்த மினிலாரி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த மகாபிரபு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story