வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை-பணம் திருட்டு


வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 11 May 2022 6:40 PM GMT (Updated: 2022-05-12T00:10:35+05:30)

விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.

விருதுநகர், 
விருதுநகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
நகை - பணம் திருட்டு 
விருதுநகர் சூலக்கரை மாடர்ன் நகரில் வசிப்பவர் மீனாட்சி (வயது 45). இவரது கணவர் மனோகரன் கனடாவில் பணியாற்றி வருகிறார். மீனாட்சி தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூரில் இருந்து இரவு வீடு திரும்பிய போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த  பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 31 பவுன் நகை மற்றும் ரூ. 44 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா காட்சி பதிவாகும் உபகரணமும் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. 
போலீசார் விசாரணை 
இதுபற்றி மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். 
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இந்த திருட்டு் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story