கைதான 15 வயது சிறுவன் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம்
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தான்.
விருதுநகர்
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தான்.
பாலியல் பலாத்காரம்
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் சிறுவர்கள் ஆவர்.
மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களும் சிறார் நீதிமன்ற குழுவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவனான 15 வயது சிறுவனை, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ரகசிய வாக்குமூலம்
இந்தநிலையில் நேற்று அந்த சிறுவன் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டான்.
மாஜிஸ்திரேட்டிடம் அந்த சிறுவன் 1¾ மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட ரகசிய வாக்குமூலம் சிறார் நீதிக்குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த சிறுவனை வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக சிறார் நீதிக்குழுமம் முடிவு எடுக்கும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story