கருங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலி


கருங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 May 2022 6:51 PM GMT (Updated: 2022-05-12T00:21:25+05:30)

கருங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

கருங்கல், 
கருங்கல் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
வாலிபர் பலி
கருங்கல் அருகே தேவிகோடு தோரணவிளை பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் வின்ஸ்டன் (வயது 25). இவர் நேற்று முன்தினம் இரவு கூட்டாலுமூடு ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வாண வேடிக்கையை பார்த்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தொழிக்கோடு-மேல்மிடாலம் சாலையில் குற்றிப் பாறைவிளை திருப்பத்தில் வின்ஸ்டன் வந்த மொபட் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. இதில் வின்ஸ்டன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story