தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 12 May 2022 12:27 AM IST (Updated: 12 May 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணி ஆகும். மேலும் இந்த முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் அவ்வப் போது கலந்து கொண்டு வேலைக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

 இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in.என்ற இணையதளத்தின் வழியாக தங்கள் விவரங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அதன்படி இந்த வாரத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

Next Story