கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்


கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 May 2022 12:28 AM IST (Updated: 12 May 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

காரைக்குடி, 
கல்லல் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
கல்லல் அருகே வீழனேரி கிராமத்தில் உள்ள வினைதீர்த்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் பாகனேரி-ராமலிங்கபுரம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 45 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயமாக 2 பிரிவாக நடை பெற்றது. 
முதல் பிரிவில் முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி வண்டியும், 2-வது பரிசை குப்பச்சிபட்டி மதுரைவீரன் மற்றும் மட்டங்கிபட்டி சிவனேசன் வண்டியும், 3-வது பரிசை கல்லல் உடையப்பா சக்தி வண்டியும், 4-வது பரிசை சிங்கம்புணரி வைரவன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை நாகப்பன்பட்டி சந்திரன் வண்டியும், 2-வது பரிசை வீழனேரி சரவணன் வண்டியும், 3-வது பரிசை தேனி மாவட்டம் வன்னாத்திபாறை கிராமத்தை் சேர்ந்த பிரசாத் வண்டியும், 40-வது பரிசை புலிமலைப்பட்டி கார்த்திக் வண்டியும் பெற்றது. 
இதேபோல் பாகனேரி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மீனாட்சிபுரம்-செம்பனூர் சாலையில் நடைபெற்றது.
பெரியமாட்டு வண்டி பந்தயம்
இதில் மொத்தம் 18 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டி பந்தயம் என 2 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாடு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை ஆனையூர் செல்வம் வண்டியும், 2-வது பரிசை மேலூர் அழகன் கவுசிக் வண்டியும், 3-வது பரிசை இளங்கிப்பட்டி சிங்கம்புலி வண்டியும், 4-வது பரிசை மட்டங்கிப்பட்டி காவ்யா வண்டியும் பெற்றன. 
பின்னர் நடைபெற்ற சின்னமாடு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கிடாரிப்பட்டி தேர்கொண்ட கருப்பையா வண்டியும், 2-வது பரிசை மீனாட்சிபுரம் ராசு மற்றும் நெற்புகப்பட்டி ரிதன்யா சதீஷ்குமார் வண்டியும், 3-வது பரிசை மீனாட்சிபுரம் முருகேசன் வண்டியும், 4-வது பரிசை கோட்டணத்தம்பட்டி மயில்கண்ணன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டி களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story