கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகம் திறப்பு


கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகம் திறப்பு
x
தினத்தந்தி 11 May 2022 7:20 PM GMT (Updated: 2022-05-12T00:50:50+05:30)

ஜெயங்கொண்டம் அருகே கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்க தலைமை அலுவலகம் திறப்பு திறக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம், 
தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா இலையூர் கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரமணிகண்டன், பொருளாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story