பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா


பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 11 May 2022 7:24 PM GMT (Updated: 2022-05-12T00:54:08+05:30)

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

சிவகாசி, 
சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள் நடைபெறும் சித்திரை பொங்கல் விழாவில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-வது நாள் திருவிழாவான நேற்று கயிறுகுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டு கையில் வேப்பிலையுடன் வந்தனர். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தனியார் அமைப்பினர் அன்னதானம் வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், நிர்வாகிகள் அசன்பதுருதீன், வெங்கடேசன், ஆரோக்கியம், லயன் லட்சுமிநாராயணன், சாம்ராஜா, கருப்பசாமிபாண்டியன், சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, பாலமுருகன், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விஜய் மன்றம் சார்பில் திருத்தங்கல் நகர தலைவர் பாலகணேஷ் பக்தர்களுக்கு மோர் வழங்கினார்.

Next Story