திருத்தங்கலில் புதிய மண்டல அலுவலகம்


திருத்தங்கலில் புதிய மண்டல அலுவலகம்
x
தினத்தந்தி 11 May 2022 7:29 PM GMT (Updated: 2022-05-12T00:59:54+05:30)

திருத்தங்கலில் புதிய மண்டல அலுவலகத்தை மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தார்.

சிவகாசி, 
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளை 4 மண்டலங்களாக அரசு பிரித்து அறிவித்துள்ளது. திருத்தங்கல் பகுதியில் உள்ள 1-வது மண்டல தலைவராக குருசாமியும், 2-வது மண்டல தலைவராக அழகுமயிலும், சிவகாசியில் உள்ள 3-வது மண்டல தலைவராக சேவுகனும், 4-வது மண்டல தலைவராக சூரியாசந்திரனும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மண்டல தலைவர்களுக்கு உரிய அலுவலகம் ஒதுக்கக்கோரி கடந்த 2 கூட்டங்களின் போதும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையில் திருத்தங்கல் போலீஸ் நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட திருமணமண்டபத்தை 1-வது மண்டல அலுவலகமாக செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் குருசாமி, சூரியாசந்திரன், கவுன்சிலர்கள் சசிக்குமார், சேதுராமன், துரைப்பாண்டியன், சுதாகரன், சாந்தி, சாமுவேல், மாணிக்கம், மகேஸ்வரி, பொன்மாடத்தி, சந்தனமாரி, தி.மு.க. நிர்வாகிகள் இன்பம், பொன்சக்திவேல், ராஜேஷ், மைக்கேல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருத்தங்கலில் புதிய மண்டல அலுவலகத்தை மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தார்.

Next Story