மாவட்ட செய்திகள்

ஒருங்கிணைந்த வேளாண் சிறப்பு முகாம் + "||" + Agriculture Special Camp

ஒருங்கிணைந்த வேளாண் சிறப்பு முகாம்

ஒருங்கிணைந்த வேளாண் சிறப்பு முகாம்
கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது.
காரைக்குடி, 
கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்யலூர் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பொய்யலூர் ஊராட்சி தலைவர் திவ்யநாதன் தலைமை தாங்கினார். சிவகங்கை வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சுரேஷ், கல்லல் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் அழகுராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்ராஜ், கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், கூத்தலூர் கூட்டுறவு செயலாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். முகாமில் வேளாண் துறை, கால்நடை துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்கப் பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.