பெண் போலீஸ் ஏட்டு திடீர் சாவு


பெண் போலீஸ் ஏட்டு திடீர் சாவு
x
தினத்தந்தி 12 May 2022 1:18 AM IST (Updated: 12 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் ஏட்டு திடீர் சாவு

மதுரை
மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சுமித்ரா(வயது 47). இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தார். சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 4-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை மோசமாகி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது சுமித்ராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இறந்த சுமித்ராவின் கணவர் மீனாட்சிசுந்தரம் ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Next Story