கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வை உடனே நடத்த வேண்டும் கலெக்டரிடம், வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் மனு


கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வை உடனே நடத்த வேண்டும் கலெக்டரிடம், வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் மனு
x
தினத்தந்தி 12 May 2022 1:27 AM IST (Updated: 12 May 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வை உடனே நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம், வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் னு வழங்கினர்.

நெல்லை:
கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஏராளமானவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து உடனே நேர்முகத் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கால்நடைத்துறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்து அந்தப்பணிக்காக காத்திருக்கிறோம். இரண்டு முறை நேர்முகத்தேர்வு நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுடன் உள்ளோம். 
எனவே உடனே நேர்முகத் தேர்வை நடத்தி எங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Next Story