பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2022 8:00 PM GMT (Updated: 2022-05-12T02:03:34+05:30)

பழவூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கன்குளம்:

பழவூர் அருகே உள்ள இருக்கன்துறையைச் சேர்ந்த பால்துரை மகள் தாமரைச்செல்வி (வயது 27). இவர் திருமணம் முடிந்து விவாகரத்து ஆனவர். இவருடைய பெற்றோர் இவருக்கு 2-வது திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதற்கு தாமரைச்செல்வி விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தாமரைச்செல்வி உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story