சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பகோணம்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சாரங்கபாணி கோவில்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு பெரிய தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்பை உடைய சாரங்கபாணி கோவில் தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனையொட்டி கடந்த சில மாதங்களாக தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தேர் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளை சமீபத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
சுத்தப்படுத்தும் பணி
இந்தநிலையில் பெரிய தேரில் உள்ள சிற்பங்களில் படிந்துள்ள தூசிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.இதற்காக மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும், தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story