சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம்
சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் செல்லியம்மன் சிங்க வாகனத்திலும், மாரியம்மன் மயில் வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் எழுந்தருளினர். அதன்பின்னர் காலை 9 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story