சிவகிரி அருகே வாகனம் மோதி புனுகு பூனை பலி
சிவகிரி அருகே வாகனம் மோதி புனுகு பூனை இறந்தது.
சிவகிரி
சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் செங்காளிகாட்டுபுதூர் ஊஞ்ச காட்டுவலசு பகுதியில் ஸ்கூட்டரில் வந்த தாய்-மகளை மர்ம விலங்கு ஒன்று துரத்தியதாக கூறப்படுகிறது. அது சிறுத்தையா, புலியா என்று இன்னும் தெரியவில்லை. இதனால் ஈரோடு வனத்துறையினர் கடந்த 3 நாட்களாக அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் கேமராக்களை பொருத்தி அதில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செங்காளிகாட்டுப்புதூரில் உள்ள விவசாயிகள் சிலர் நேற்று காலை கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் நாய் ஒன்று ஏதோ ஒரு விலங்கை கவ்விக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதனால் நாயை விரட்டிவிட்டு அருகே சென்று பார்த்தார்கள்.
அப்போது காயங்களுடன் இறந்து கிடந்த விலங்கு சுமார் ½ அடி உயரத்தில் பூனைபோல் இருந்தது. உடனே விவசாயிகள் விலங்கை செல்போனில் படம் பிடித்து ஈரோடு வனத்துறை அதிகாரி ரவீந்திரநாத்துக்கு அனுப்பினார்கள். அவர் அதை பார்த்துவிட்டு அது புனுகு பூனை என்று கூறினார். அதிகாலை நேரத்தில் ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு புனுகு பூனை இறந்திருக்கலாம். அதன்பின்னர் அங்கு சுற்றிய நாய் அதை கவ்வியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story