ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது


ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 May 2022 2:29 AM IST (Updated: 12 May 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது தந்தையுடன், கண்ணூர்-யஸ்வந்த்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அதே பெட்டியில், கோவை மாவட்டம் சிவானந்தா காலனி கண்ணுசாமி கவுண்டர் லே -அவுட் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான கமலநாதன் (வயது 35) என்பவர் சாதாரண டிக்கெட்டில் பயணித்தார்.
இந்த ரெயில், ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், சேலம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது கமலநாதன், 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தந்தையிடம் இதுபற்றி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் சேலம் ரெயில்வே போலீசில்  புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கமலநாதனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
எனினும் சம்பவம் நடந்த இடம் ஈரோடு எல்லைக்கு உட்பட்டது என்பதால் சேலம் போலீசார் கமலநாதனை ஈரோடு ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஈரோடு ரெயில்வே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கமலநாதனை கைது செய்தனர்.

Next Story