மாவட்ட செய்திகள்

ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழா:அலகு குத்தி-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் + "||" + Debt to the devotees

ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழா:அலகு குத்தி-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழா:அலகு குத்தி-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோடு
ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அலகு குத்தி-அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
மாகாளி-மதுரைவீரன் கோவில்
ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி மாகாளியம்மன், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந்தேதி இரவு 9 மணிக்கு அம்மனை அழைத்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை காவிரி ஆற்றங்கரையில் இருந்து புஸ்ப ரதத்தில் அலங்கரித்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, இளநீர் காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். விழாவில் ஈரோடு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
புஷ்ப அலங்காரம்
இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கருப்பராயன் கோவிலில் இருந்து மதுரை வீரன் சிலை புஷ்பரதத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து பின்னர் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சக்தி கரகத்தை கோவிலில் இருந்து எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.