கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென உயர்ந்துள்ளது. புதிதாக 167 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 18 ஆயிரத்து 76 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 156 பேருக்கும், சித்ரதுர்காவில் 4 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 3 பேருக்கும், மைசூரு, விஜயாப்புரா, பெலகாவியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 150 பேர் குணம் அடைந்தனர். 1,943 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் அது நேற்று உயர்ந்து 167 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story