குடும்பத்தகராறு காரணமாக 6 மாத பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தந்தை கைது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடும்பத்தகராறு காரணமாக 6 மாத பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் 6-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவரது மனைவி திரிஷா (26). இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறால் கடந்த 20-ந்தேதி சுரேஷ் தனது 6 மாத கைக்குழந்தையை தூக்கி தெருவில் வீசியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குழந்தையை தெருவில் தூக்கிவீசி எறிந்த குற்றத்துக்காக போலீசார் சுரேஷை தொடர்ந்து தேடி வந்தனர். இந்தநிலையில் வெளிநாட்டிற்கு சென்று தலைமறைவான சுரேஷ் நேற்று காலை சென்னை திரும்பினார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுத்து சுரேஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story