ஊத்துக்கோட்டை அருகே அனுமதி பெறாத தனியார் நிறுவனத்துக்கு சீல்
ஊத்துக்கோட்டை அருகே அனுமதி பெறாத தனியார் நிறுவனத்துக்கு சீல் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி கிராம எல்லையில் தென் கொரியாவை சேர்ந்த தனியார் நிறுவனம் செல்போன் உதிரிபாகங்கள், லைட்டுகள் தயார் செய்யும் தொழிற்சாலை நிறுவி வருகிறது. இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு முறையான அனுமதி பெறாத நிறுவனத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story