ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
ராணிப்பேட்டை
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலர்களுக்கான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை), வருகிற 20, 27-ந் தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. அதில் பல தனியார் துறை நிறுவனங்கள் பங்ேகற்க உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் -2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் பங்ேகற்கலாம். முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story