ரூ 4,627 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4,627 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.4,627 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
வங்கி அதிகாரிகள் கூட்டம்
திருப்பத்துர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2022-2023 வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட, இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர்கள் கிருஷ்ணராஜ் மற்றும் பிரசன்னகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
ரூ.4627 கோடி கடன் வழங்க இலக்கு
மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக கடன் வழங்க முன்வர வேண்டும். இம்மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்கிட ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் விவசாயக்கடனாக ரூ.2,832 கோடி, சிறு குறு தொழில் கடனாக ரூ.711 கோடி, இதர முன்னுரிமை கடனாக ரூ.1,084 கோடி என மொத்தம் ரூ.4627 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை குறித்த காலத்துக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முகக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜசேகர், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் மாமல்லன், யூனியன் வங்கி மேலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story