வேடசந்தூர் அரபு அவுலியா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
வேடசந்தூர் அரபு அவுலியா தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் மகான் அரபு அவுலியா தர்காவில் 233-ம் ஆண்டு உருஸ் விழா கடந்த 3-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வாசகமாலை, போர்வை ஊர்வலம் மற்றும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடந்தது. நேற்று மாலை சிலம்பாட்டம், மாடுஆட்டம், மயிலாட்டத்துடன் போர்வை ஊர்வலம் மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது.
இன்று அதிகாலை 3 மணிக்கு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் தர்காவில் இருந்து தொடங்கி வடமதுரை ரோடு, சாலைத்தெரு, மார்க்கெட் ரோடு, பஸ் நிலையம் வழியாக மீண்டும் தர்காவை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல், கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வேடசந்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் செய்து இருந்தனர்.
வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story