பிரம்மோற்சவ விழா திருத்தணி முருகன் கோவில் தேரோட்டம்


பிரம்மோற்சவ விழா திருத்தணி முருகன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 4:30 PM IST (Updated: 12 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் முருகபெருமானின் 5-ம் படை வீடாக விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடந்து வருகிறது.

இதில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஓரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய விழாவாக நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகபெருமான் வள்ளி- தெய்வானைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று காலை உற்சவர் முருகபெருமான் யாளிவாகனத்திலும், மாலையில் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Next Story