பட்டிவீரன்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா
பட்டிவீரன்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. முதலாம் நாள் எல்லைக்காவல்கார சாமி பூஜைக்கு பின் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம் வந்து கொலுமண்டபத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. 2-வது நாள் மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
3-வது நாளான நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 1,008 குத்துவிளக்கு பூஜை மற்றும் அம்மன் பூப்பல்லக்கில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து முளைப்பாரி ஊர்வலத்துடன் மேளதாளம் முழங்க மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இத்திருவிழாவினை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
Related Tags :
Next Story