ரூ.4.96 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கே.வி.குப்பம் அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் ரூ.4.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. தாசில்தார் து.சரண்யா தலைமை தாங்கினார். முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகைகள், தையல் எந்திரம், சலவைப்பெட்டி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 109 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 98 மனுக்கள் ஏற்கப்பட்டன.
வருவாய் கோட்டாட்சியர் சா.தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் தனித் தாசில்தார் ரமேஷ், மண்டல துணைத் தாசில்தார் கி.பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி, ஊராட்சி மன்ற தலைவர் வி.ஆர்.சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மணிவாசன் உள்பட பவ்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story