கோவை வ.உ.சி. மைதானத்தில் கட்டப்பட்ட மாதிரி வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.
கோவை வ.உ.சி. மைதானத்தில் கட்டப்பட்ட மாதிரி வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.
கோவை
கோவை வ.உ.சி. மைதானத்தில் கட்டப்பட்ட மாதிரி வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது.
ரூ.2.50 லட்சத்தில் மாதிரி வீடு
கோவை வ.உ.சி. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்றது.
அபபோது பல்வேறு அரசு துறைகள் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டன. இதில், குடிசை மாற்றுவாரியம் சார்பில் சிறிய குடும்பம் வசிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்த செலவில் மாதிரி வீடு கட்டப்பட்டது.
அந்த மாதிரி வீடு, 350 சதுர அடிக்குள் ஒரு ஹால், படுக்கை அறை, சமையலறை, வீட்டுக்குள் கழிவறை என்று ரூ.2.50 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அது பலரையும் வெகுவாக கவர்ந்தது.
அது பற்றி ஆர்வமுடன் விசாரித்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் அந்த மாதிரி வீடு, அஸ்திவாரம் போடாமல் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருட்கள் மாயம்
விழா முடிந்த பிறகும் மாதிரி வீட்டை அதிகாரிகள் அகற்ற வில்லை. பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெறும் வகையில் மாதிரி வீடு அப்படியே விடப்பட்டது. ஆனால் அதன்பிறகு போதிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லை.
இதனால் மாதிரி வீட்டின் கதவுகள், ஜன்னல் கண்ணாடி போன்ற பொருட்கள் மாயமாகி விட்டன.
அந்த வீட்டின் தரையில் போடப்பட்ட டைல்ஸ் கற்கள் அனைத்தும் உடைந்து தகர்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த மாதிரி வீட்டுக்குள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
அந்த வீட்டுக்குள் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் செல்வதை தடுக்க இரும்பு தகரத்தால் அடைத்தனர்.
அதில் பாதியை உடைத்து எடுத்து சென்று விட்டனர். இதனால் அந்த மாதிரி வீடு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
போலீஸ் ரோந்து
ஏழை-எளிய மக்கள் குறைந்த செலவில் தரமான வீடு கட்டுவதை விளக்கும் வகையில் மாதிரி வீடு கட்டப்பட்டது.
தற்போது அதன் மேற்கூரை, கதவு, ஜன்னல் கண்ணாடியை காணவில்லை. அங்கு இரவு 10 மணிக்கு மேல் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
எனவே அந்த மாதிரி வீட்டை பராமரிக்க வேண்டும். அல்லது இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த பகுதியில் ரோந்து சென்று சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story