தூத்துக்குடியில் தொழில் உரிமம் பெறாத திருமண மண்டபத்துக்கு சீல்
தூத்துக்குடியில் தொழில் உரிமம் பெறாத திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், வீடுகளில் வரி பாக்கியை வசூல் செய்வதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நோட்டீசு வழங்கப்படுகிறது. அதன்பிறகும் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு மாநகராட்சியில தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது. இதற்கான பலமுறை நோட்டீசு கொடுத்தும் உரிமம் பெறாமலும், உரிய கட்டணத்தை செலுத்தாமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள் அரிகணேசன், ஸ்டாலின் ஆகியோர் தொழில் உரிமம் பெறாத திருமண மண்டபத்துக்கு சீல் வைத்தனர். அதே வணிக வளாகத்தில் இருந்த சில கடைகளையும் பூட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story