நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா


நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 12 May 2022 7:12 PM IST (Updated: 12 May 2022 7:12 PM IST)
t-max-icont-min-icon

நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி கடந்த 3-ந் தேதி இரவு காப்பு கட்டுதலும், 9-ந் தேதி வரை அழகுநாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 10-ந் தேதி அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், 11 மற்றும் 12-ந் தேதி அம்மன் அழைத்தலும் நடந்தது. 
இதையடுத்து அம்மன் தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தேர் நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பொய்யேரி, மரவாபாளையம், ஒழுகூர்பட்டி, ஊஞ்சப்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் கூடுதுறை உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மீண்டும் நேற்று நன்செய் இடையாறை வந்தடைந்தது. இதில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு படைத்து வழிபட்டனர். 
விழாவில் நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு அழகுநாச்சியம்மன் கோவில்‌ திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story