செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்


செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 7:20 PM IST (Updated: 12 May 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோமள சாந்தி தலைமை தாங்கினார். வசந்த மாலை வரவேற்றார். வேலம்மாள் விளக்க உரையாற்றினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராசையா, ஒருங்கிணைந்த இந்திய முறை மருந்தாளுனர் சங்க மாநில தலைவர் மோகன்ராஜ், நில அளவை ஒன்றிய அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் நவநீதன், பொருளாளர் கருப்பசாமி, அனைத்து ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி, ஒருங்கிணைந்த இந்திய முறை மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம், அரசு ஊழியர் சங்க இணைச் செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.


Next Story