திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் மன்ற கருத்தரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் மன்ற கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல்துறை மற்றும் விலங்கியல் மன்றம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விலங்கியல்துறை தலைவர் சி.சுந்தரவடிவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்திய விலங்கியல் ஆய்வக அறிவியல் அறிஞரக கல்லூரி முன்னாள் மாணவர் பி.பத்மநாபன் கலந்து கொண்டு, இந்திய கடல் மற்றும் கடல்சார் உயிரின பெருக்கம் பற்றி விரிவுரையாற்றினார். மேலும் கடல்சார் உயிரின பல்லுயிர் பெருக்கம் குறித்து விரிவான விளக்கமளித்தார். பி.ஆரோக்கியமேரி பர்ணாந்தஸ் நன்றி கூறினார். இவ்விழாவில் பேராசிரியர்கள் ச.லிங்கதுரை, மணிகண்டராஜா, உதவிப் பேராசிரியர்கள், சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் மற்றும் இளங்களை, முதுகலை மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story