‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
‘தினத்தந்தி’க்கு நன்றி
வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் கன்னிமார்கோவில் அருகே மின்கம்பத்தின் மேல்பகுதி முறிந்து மின்கம்பியில் தொங்கியது. இதுபற்றி ‘தினத்தந்தி’யின் புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்றிவிட்டனர். இதற்காக ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். -பாக்கியராஜ், வத்தலக்குண்டு.
குப்பை குவியல்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்னால் உள்ள ஆர்.எஸ்.சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. நகரின் மையப்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. எனவே குப்பைகளை அகற்றுவதோடு, இனிமேல் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாரி, திண்டுக்கல்.
சேதம் அடைந்த குடிநீர் தொட்டி
சாணார்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. அது மேலும் சேதம் அடையாமல் தவிர்க்க குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும். -சவுந்தர், சிலுவத்தூர்.
பாலம் சீரமைக்கப்படுமா?
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேல்மணலாறு பாலம் சேதம் அடைந்து விட்டது. பாலத்தில் பள்ளம் உருவாகி விட்டதோடு, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் அந்த கம்பிகள் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சேதம் அடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும். -மாயவன், தேனி.
Related Tags :
Next Story