3 பேர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே 3 பேர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி நிலப்பிரச்சினையால் ஜேசுராஜ், மரியராஜ் மற்றும் வசந்தா ஆகிய 3 பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நாஞ்சான்குளத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 56), அழகர்சாமியின் மகன்கள் ராஜா மணிகண்டன் (24), ராஜசுந்தரபாண்டி (26), புளியம்பட்டி மருதன்வாழ்வை சேர்ந்த முருகையா மகன் செந்தூர்குமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அழகர்சாமியின் மனைவி பேச்சியம்மாள் (46) மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல்களை மானூர் போலீசார் நேற்று பாளையங்கோட்டை மற்றும் மதுரை மத்திய சிறைகளில் சமர்ப்பித்தனர்.
Related Tags :
Next Story