சிறுத்தைப்புலிகள் அட்டகாசம்


சிறுத்தைப்புலிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 12 May 2022 8:14 PM IST (Updated: 12 May 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே சிறுத்தைப்புலிகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

பந்தலூர்

பந்தலூர் அருகே சிறுத்தைப்புலிகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சிறுத்தைப்புலி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே உள்ள நாயக்கன்சோலை பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் காளிதாசின் வீட்டு பின்புறம் உள்ள கொட்டகைக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. தொடர்ந்து 2 வயது பசுமாட்டை கடித்தது. உடனே மாடுகளின் சத்தம் கேட்ட காளிதாஸ், அங்கு சென்று பார்த்தார். அப்போது கொட்டகைக்குள் இருந்து சிறுத்தைப்புலி தப்பி ஓடியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 

கேமரா

அதன்பேரில் சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் சேரம்பாடி கால்நடை டாக்டர் நவீன்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு, படுகாயம் அடைந்த பசுமாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 2  கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பீதி

இதேபோன்று சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியில் வாசுகி என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைக்குள் புகுந்து 2 வயது ஆட்டை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றது. அந்த பகுதியிலும் 2 கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நாயக்கன்சோலை மற்றும் கண்ணம்பள்ளி ஆகிய பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் அட்டகாசம் தொடர்வதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். 


Next Story