கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்


கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
x
தினத்தந்தி 12 May 2022 8:14 PM IST (Updated: 12 May 2022 8:14 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்

கோத்தகிரி

கோத்தகிரி அருகே திம்பட்டியில் சிவன்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு இன்று காலையில் வழக்கம்போல் பூசாரி பூஜை செய்ய சென்றார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு விளக்குகளில் இருந்த எண்ணெய் கீழே கொட்டி கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story