திருக்கரக உற்சவ விழா
திருக்கரக உற்சவ விழா
குன்னூர்
குன்னூர் அருகே காமராஜபுரம் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள பட்டத்துளசியம்மன் கோவிலில் 73-வது ஆண்டு திருக்கரக உற்சவ விழா கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு பூவரம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முனி ஓட்டுதல் நடந்தது. 10-ந் தேதி அம்மன் கரக அலங்கார ஊர்வலம் நாதஸ்வர இசை, தாரை தப்பட்டை முழங்க தரேமி வழியாக கோவிலை அடைந்தது. நள்ளிரவு 12 மணிக்கு கங்கையில் இருந்து அம்மன் அழைப்பு நடைபெற்றது.
நேற்று சக்திவேலுடன் அம்மன் படைக்கலம் ஊர் நாட்டாமை வீட்டில் இருந்து கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மன் அழைப்பு, உச்சி பூஜை, அம்மன் அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது. பின்னர் மாவிளக்கு பூஜை, கிளி வேட்டை, அம்மன் அருட்பிரசாதம், இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இன்று மறு பூஜை, மஞ்சள் நீராடல், அம்மன் கங்கை சேர்தல் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர், பொதுமக்கள், கோவில் கமிட்டியினர் மற்றும் அனைத்து மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story